சென்னை துறைமுகத்தில் மருத்துவ கழிவுகளுடன் சீனா கப்பல் உடனடியாக வெளியேற்ற வேண்டும் -
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அறிக்கை
கொரனாவைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ள நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சீனா மருத்துவ மனையில் கொரனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர். சீனாääதைவான் உள்ளிட்ட இன்னும் சிலநாடுகளுக்குகொரனாவைரஸ் பரவியுள்ளது.
கொரனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும் மும்பையில் கொரனாவைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் 8 பேர் அங்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. சென்னை விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில் சென்னை துறைமுக பொறுப்பு கழக உயர்மட்டக்குழு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த கூட்டத்தில் சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் துறைமுகத்துக்கு வந்துள்ள அந்தகப்பலை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஒரு வேலை கப்பலை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கொரனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக நாடுகள் தங்களை பாதுகாத்து கொள்ள துடித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மருத்துவ கழிவுகளுடன் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள சீனா கப்பலால் கொரனாவைரஸ் தமிழகத்தை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழக மக்களிடையே அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும் முன்பாக சென்னை துறைமுகத்தில் இருந்து சீனா கப்பலை திருப்பி அனுப்ப சென்னை துறைமுக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.